அமெரிக்காவில் மஹாபெரியவா மணிமண்டபம் கோவில்; ஜூலை 5ல் கும்பாபிஷேகம்
அமெரிக்காவில் மஹாபெரியவா மணிமண்டபம் கோவில்; ஜூலை 5ல் கும்பாபிஷேகம்

அமெரிக்காவில் மஹாபெரியவா மணிமண்டபம் கோவில்; ஜூலை 5ல் கும்பாபிஷேகம்

Updated : ஜூன் 02, 2023 | Added : ஜூன் 02, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
அமெரிக்கா, நியூ ஜெர்ஸியில் மிகப்பெரிய மஹா பெரியவா மணிமண்டபம் கோயில் கட்டபட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் ஜூலை 5ல் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.பேசும் தெய்வம், நடமாடும் தெய்வம் என்று உலகம் முழுவதும் போற்றப்படும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு, பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு எதிர்கால சந்ததிகளுக்கு வழிகாட்டும் ஒரு அணையா விளக்காக திகழும் வண்ணம் ஓர் கோவில்
Mahaperiyava Mani Mandapam Temple in America; Kumbabhishekam on 5th July  அமெரிக்காவில் மஹாபெரியவா மணிமண்டபம் கோவில்; ஜூலை 5ல் கும்பாபிஷேகம்

அமெரிக்கா, நியூ ஜெர்ஸியில் மிகப்பெரிய மஹா பெரியவா மணிமண்டபம் கோயில் கட்டபட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் ஜூலை 5ல் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.



latest tamil news


பேசும் தெய்வம், நடமாடும் தெய்வம் என்று உலகம் முழுவதும் போற்றப்படும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு, பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு எதிர்கால சந்ததிகளுக்கு வழிகாட்டும் ஒரு அணையா விளக்காக திகழும் வண்ணம் ஓர் கோவில் அமைக்க வேண்டும். அக்கோவில் காலங்கடந்து நிற்குமளவுக்கு கருங்கல்லினால் ஆக்கப்பட வேண்டும் , அதுவும் அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் பக்தர்களின் மனதில் தோன்றி, அந்த சங்கல்பத்தை முன்னிட்டு,



latest tamil news


ஸ்ரீ மஹாபெரியவா திரு பாதுகையுடன் உலகெங்கும் யாத்திரை சென்று, அமெரிக்காவில் இது வரை 40 மாநிலங்களுக்கு மேல் சென்றும், நமது பாரத பூமியில் பற்பல இடங்களுக்கு சென்றும், அது மட்டுமின்றி, நம் பூவுலக கண்டங்களில் பல நாடுகளுக்குச் சென்றும், யுனைடெட் கிங்டம், அபுதாபி, மஸ்கட், பஹ்ரைன், கனடா, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற பல இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல ஆயிரக்கணக்கான பக்தர்களின் வீடுகளுக்குச் சென்றும், பூஜைகள் செய்து அவர்களின் பிரார்த்தனைகள் மற்றும் பங்கேற்பின் மூலம், ஸ்ரீ மஹாபெரியவாளின் பரிபூரண அனுக்ரஹத்துடன் ஸ்ரீ ஜெயேந்தர ஸரஸ்வதி ஸ்வாமிகள், ஸ்ரீ சங்கரவிஜயேந்தர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் சத்குரு ஸ்ரீ சிவன் ஸார் அனுக்ரஹத்தினால் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் ஆலய திருப்பணி முடிந்து மஹா கும்பாபிஷேகம் ஜூலை 5ல் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.



latest tamil news


இவ்விழாவில் உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டு மஹாபெரியவா அருள்பெற வேண்டும் என ஸ்ரீ மஹாபெரியவா மணிமண்டபம் மற்றும் அமெரிக்கா, காஞ்சி காமகோடி சேவா பவுண்டேஷன் கேட்டுக்கொண்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

Sampath Kumar - chennai,இந்தியா
04-ஜூன்-202312:40:58 IST Report Abuse
Sampath Kumar இந்த மகா பெரியவாறு செய்த ஒரு காரியத்தை தமிழர்கள் ஆக்கினான் unnarthu parka vaedukintraen ஒரு சமயம் சக்திவேல் முருக என்டர் tamil அவர் பன்மொழி புலவர் samaskirutham இங்கே அவருக்கு கற்று கொடுக்க yarum முன் வராததால் அவர் ஜெர்மனி சென்று அங்கே சமஸ்கிருதம் padithar pirku indiva வந்து உள்ளாகியது என்ன்வென்றால்
Rate this:
R S BALA - CHENNAI,இந்தியா
05-ஜூன்-202314:16:00 IST Report Abuse
R S BALA😄என்னதான் சொல்ல வாரீர்..😄...
Rate this:
Cancel
nallavan - manigramam,பஹ்ரைன்
04-ஜூன்-202300:08:18 IST Report Abuse
nallavan ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம் சரணம்
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
03-ஜூன்-202317:15:23 IST Report Abuse
Barakat Ali ஹிந்துக்களை பொறுத்தவரை அவர் ஒரு குரு .... ஆனால் படைத்தவனை வணங்காமல் படைப்புக்களை வணங்குவது இறைவனுக்கு இணைவைப்பதாகும் .....
Rate this:
RAMACHANDRAN S - TIRUCHIRAPALLI,இந்தியா
04-ஜூன்-202306:33:19 IST Report Abuse
RAMACHANDRAN Sஉங்கள் நம்பிக்கையை எங்கள் மீது திணிக்காதீர்கள். பதிலுக்கு நாங்கள் சொன்னால் உடனே வன்முறை. திருந்தவே மாட்டடீர்கள்....
Rate this:
R S BALA - CHENNAI,இந்தியா
05-ஜூன்-202314:19:49 IST Report Abuse
R S BALAவந்துட்ட அறிவுரை சொல்ல.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X