சென்னை: சென்னை -போடி இடையே வாராந்திர ரயில் சேவை வரும் 15 ம் தேதி துவங்க உள்ளது.
இது குறித்து ரயில்வே வாரியம் வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:
மதுரை போடி ரயில் பாதை நீண்ட காலத்திற்கு பிறகு அகலப்பாதையாக மாற்றப்பட்டது. தொடர்ந்து மதுரையில் இருந்து தேனி வரையில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து இப்பகுதி மக்கள் போடி -சென்னைக்கு நேரடி ரயில் சேவை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து வரும் 15 ம் தேதி முதல் சென்னையில் இருந்து போடி வரையில் வாராந்திர ரயில் இயக்க உள்ளது. திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை -மதுரை வரை இயக்கப்படும் வாராந்திர ரயில் போடி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா வரும் 15 ம் தேதி போடியில் நடைபெற உள்ளது. ரயில் சேவையை மத்திய இணை அமைச்சர் போடியில் இருந்து துவக்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மதுரை- தேனி வரை இயக்கப்படும் ரயில் போடி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.