திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு மருத்துவமனையில், சப் கலெக்டர் ஸ்ருத்தன் ஜெய் நாராயணன் ஆய்வு மேற்கொண்டார்.
அண்ணாதுரை (சமூக ஆர்வலர்) : மருத்துவமனைக்கு வசதிகளை செய்வதற்கு முன் போதிய மருத்துவர், பணியாளர்களை நியமிக்க வேண்டும். 1950வ் இருந்த வசதிகளை மருத்துவமனையில் இன்றும் உள்ளது. நோயாளிகள் நல சங்கம் என்பது அரசியல் கருத்து வேறுபாடு இன்றி இருக்க வேண்டும். அரசியல் பிரமுகர்களை உள்ளே நுழைப்பதால் இங்கு எதுவுமே நடப்பதில்லை. தன்னார்வலர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். சிறிய காயங்களுக்கும் கூட பரிந்துரை செய்கின்றனர். 1950ல் உள்ள வசதிகளே மருத்துவமனையில் இன்றும் உள்ளது. தன்னார்வல்கள் உட்பட ரோட்டரி அரிமா சங்கம் உள்ளிட்டவை
மருத்துவமனைக்கு ஏராளமாக செய்கின்றனர். ஆனால் அவற்றை முறையாக பராமரிப்பது இல்லை.
ஆறுமுகம் ( ரெயின்போ ரோட்டரி சங்க தலைவர்) : பல்லடம் அரசு மருத்துவமனைக்கு, ரத்த வங்கி டயாலிசிஸ் என, தேவைகள் அதிகம் உள்ளது. யாரையும் குறை சொல்லி எந்த பயனும் இல்லை. தேவையான வசதிகள் நோயாளிகளுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை வேண்டும். நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் செய்து தருகிறோம் என்று கேட்டதற்கு, இதெல்லாம் திருப்பூரில் சென்று பேசிக் கொள்ளுங்கள் என்றனர். இதனால் இந்த ஆம்புலன்ஸ் திட்டம் தற்போது மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்கிறது. ஏற்கனவே செய்து கொடுத்த அவசர சிகிச்சை பிரிவுக்கே மருத்துவர்கள் இல்லாத சூழலில், எவ்வாறு புதிய வசதிகளை ஏற்படுத்தித் தருவது.
முன்னதாக, மருத்துவமனை வார்டுகளை ஆய்வு செய்த சப் கலெக்டர் கூட்டத்தில் பங்கேற்றார் மருத்துவமனையின் தேவைகள் மற்றும் நிறை குறைகளை கேட்டறிந்தார்.