தேனி அரிசி கொம்பன் யானையை பிடிக்கும் வரையில் கம்பம் கூடலூர் பகுதியில் 144 தடை உத்தரவு நீடிக்கும் என மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: தேனி அரிசி கொம்பன் யானையை பிடிக்கும் வரையில் கம்பம் கூடலூர் நகராட்சி பகுதிகளில் 144 தடை உத்தரவு நீட்டிக்கபட்டு உள்ளது. மக்கள் இரவு நேரங்களில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். அரிசி கொம்பன் யானை நடமாட்டம் குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.