வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: புதிய பார்லிமென்டில் வரையப்பட்டுள்ள சுவரோவியத்துக்கு, நம் அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

சர்ச்சை
தலைநகர் டில்லியில் புதிய பார்லிமென்ட் கட்டடம், கடந்த 28ல் திறந்து வைக்கப்பட்டது. இதில் உள்ள சுவரோவியத்தில் இந்திய வரைபடம் இடம் பெற்றிருந்தது. இதில், நம் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பாகிஸ்தானின் பகுதிகளும் இடம் பெற்றிருப்பதாக சர்ச்சை எழுந்தது.
எதிர்ப்பு
இந்த வரைபடத்தை, 'அகண்ட பாரதம்' என்ற பெயரில், சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர்.

இதற்கு, நேபாளத்தைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது:
பார்லிமென்டில் உள்ள சுவரோவியத்தில் அசோக சக்கரவர்த்தியின் ஆட்சி காலம் மற்றும் அதற்கு முந்தைய வரலாறு மற்றும் பரப்பளவு தொடர்பாக விளக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேல் கூறுவதற்கு இந்த விஷயத்தில் எதுவும் இல்லை. இது குறித்து சில அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்த கருத்து பற்றி, எதுவும் கூற விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.