குஜராத் மருந்து தரமற்றது என இலங்கை புகார்
குஜராத் மருந்து தரமற்றது என இலங்கை புகார்

குஜராத் மருந்து தரமற்றது என இலங்கை புகார்

Added : ஜூன் 02, 2023 | கருத்துகள் (13) | |
Advertisement
புதுடில்லி-குஜராத்தில் தயாரிக்கப்பட்டு, இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கண் சொட்டு மருந்து தரமற்று இருந்ததால், 30க்கும் அதிகமானோருக்கு கண் தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை குற்றஞ்சாட்டியுள்ளது.குஜராத்தைச் சேர்ந்த, 'இந்தியானா ஆப்தால்மிக்ஸ்' என்ற நிறுவனம், கண் நோய் தொடர்பான மருந்துகளை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் சமீபத்தில் தயாரித்த, 'மெத்தில்
Sri Lanka complains that Gujarat medicine is of poor quality   குஜராத் மருந்து தரமற்றது என இலங்கை புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-குஜராத்தில் தயாரிக்கப்பட்டு, இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கண் சொட்டு மருந்து தரமற்று இருந்ததால், 30க்கும் அதிகமானோருக்கு கண் தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை குற்றஞ்சாட்டியுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த, 'இந்தியானா ஆப்தால்மிக்ஸ்' என்ற நிறுவனம், கண் நோய் தொடர்பான மருந்துகளை தயாரித்து வருகிறது.

இந்த நிறுவனம் சமீபத்தில் தயாரித்த, 'மெத்தில் பிரெட்னிசோலோன்' என்ற கண் சொட்டு மருந்து, அண்டை நாடான இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

இந்த மருந்தை பயன்படுத்திய 30க்கும் மேற்பட்டோருக்கு கண் தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசு குற்றஞ்சாட்டிஉள்ளது.

இதையடுத்து, மத்திய தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், 'பார்ம்எக்சில்' என்ற மருந்துகள் ஏற்றுமதி கவுன்சில், இந்த புகார் தொடர்பாக இரண்டு நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி, குஜராத் நிறுவனத்துக்கு 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

இந்த குற்றச்சாட்டை, குஜராத் மருந்து நிறுவனம் மறுத்துள்ளது.

நம் நாட்டில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்ட மருந்துகளின் தரம் குறைவாக இருப்பதாக பிற நாடுகள் புகார் தெரிவிப்பது, இந்த ஆண்டில் நான்காவது முறையாக அரங்கேறி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (13)

03-ஜூன்-202311:08:27 IST Report Abuse
பாமரன் மீண்டும் ஒரு விஷமத்தனமான தலைப்பு... குசராத்து காரணுவ எல்லாத்திலேயும் ஃபிராடுங்கன்னு தெரிஞ்சாலும் இந்த மருந்து தரக்கட்டுப்பாடு மத்திய அரசு பார்க்கும் விஷயம்...🙄 மேலிடத்தில் கோச்சுப்பாளோன்னு இப்படி ஒரு தலைப்பு தேவையா...😡
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
03-ஜூன்-202313:36:52 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANஎந்த நிறுவனரும் எங்கும் தயாரிப்பு நிறுவனம் துவக்கலாம் .... அதே போல எந்த நிறுவனத்திலும் எந்த மாநிலத்து தொழிலாளர்களும் பணிபுரியலாம் (அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமை) .... குஜராத் நிறுவனம் என்றால் அதன் நிறுவனரான குஜராத்தித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை...
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
03-ஜூன்-202317:26:32 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANஅவர்களுக்கு இருக்கும் மூளைதான் ......
Rate this:
Cancel
03-ஜூன்-202310:01:55 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் இலங்கை சீனாவின் கள்ள உறவில் இருக்கிறது ... இது போன்ற குற்றச்சாட்டு வரவில்லை என்றால்தான் ஆச்சரியம் .....
Rate this:
Cancel
03-ஜூன்-202310:00:41 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் குஜராத் மருந்து ? இந்திய மருந்து இல்லீங்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X