வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இம்பால்,-மணிப்பூரில் கலவரம் காரணமாக பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வேண்டுகோளை ஏற்று, 140க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் நேற்று பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
![]()
|
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி சமூகத்தினருக்கு பட்டியலின பழங்குடி அந்தஸ்து அளிப்பதை எதிர்த்து, கூகி உள்ளிட்ட பழங்குடியினர் அமைப்புகள் கடந்த மாதம் 3ம் தேதி பேரணி நடத்தின.
இதில், இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறிய நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், மணிப்பூரின் பாதுகாப்பு நிலவரத்தை பார்வையிடவும், பல்வேறு தரப்பினருடன் பேச்சு நடத்தி அமைதியை நிலைநாட்டவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நான்கு நாள் பயணமாக மணிப்பூர் சென்று பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, கலவரங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய மத்திய அமைச்சர், போராட்டக்காரர்கள் தங்களிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
தடையை மீறி ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்தார்.
![]()
|
இதையடுத்து, ஏராளமானோர் தங்களிடம் உள்ள ஆயுதங்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
பிஸ்டல்கள், இயந்திர துப்பாக்கிகள், ஏ.கே., ரக துப்பாக்கிகள், ரைபிள்ஸ், கண்ணீர் புகைக்குண்டு, லாஞ்சர்ஸ் உட்பட 140க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரும்பாலான இடங்களில் கலவரங்கள் குறைந்து அமைதி திரும்பி வருவதால், முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் வீடு திரும்பி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement