வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,-மத்திய அரசின் வனப்பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா மீது பொதுமக்கள் கருத்துக்களை வரவேற்று பார்லிமென்ட் கூட்டுக்குழு வெளியிட்ட அறிக்கைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
![]()
|
மத்திய அரசு இயற்றியுள்ள வனப்பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என, பார்லிமென்ட் கூட்டுக்குழு அறிவிக்கை வெளியிட்டது. மக்கள் தங்கள் கருத்துக்களை 15 நாட்களுக்குள், ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என, அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த அறிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், வனத்துறை பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துக்களை தெரிவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மக்களுக்கு அந்த இரண்டு மொழிகளுமே தெரியாத நிலையில், எவ்வாறு அவர்களால் கருத்துக்களை வெளிப்படுத்த முடியும் என மனுவில் கேள்வி எழுப்பப்பட்டது.
![]()
|
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் அறிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''வரும் 5ம் தேதியன்று இந்த மசோதா தமிழிலும் வெளியிடப்படும்,'' என, நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம், ஜூலை முதல் வாரத்தில் விசாரணை துவங்கும் என உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement