ஒரு வழியாக பா.ஜ., எம்.பி. மீது எப்.ஐ.ஆர்., பதிவு
ஒரு வழியாக பா.ஜ., எம்.பி. மீது எப்.ஐ.ஆர்., பதிவு

ஒரு வழியாக பா.ஜ., எம்.பி. மீது எப்.ஐ.ஆர்., பதிவு

Updated : ஜூன் 04, 2023 | Added : ஜூன் 03, 2023 | கருத்துகள் (36) | |
Advertisement
புதுடில்லி: வீராங்கனையரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன், 66, மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும், இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, புதுடில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். மல்யுத்த வீரர், வீராங்கனையருக்கு ஆதரவாக மற்ற விளையாட்டு வீரர்களும் திரள்வதால், அதிரடி முடிவு எடுக்க மத்திய அரசு
In FIR, wrestlers narrate traumatic experiences of sexual harassment by WFI chief Brij Bhushan Sharan Singh ஒரு வழியாக பா.ஜ., எம்.பி. மீது எப்.ஐ.ஆர்., பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: வீராங்கனையரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன், 66, மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும், இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, புதுடில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். மல்யுத்த வீரர், வீராங்கனையருக்கு ஆதரவாக மற்ற விளையாட்டு வீரர்களும் திரள்வதால், அதிரடி முடிவு எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ., - எம்.பி., யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வினேஷ் போகத், சாக் ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகிய மல்யுத்த வீரர், வீராங்கனையர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




கண்டனம்


கடந்த, 28ம் தேதி டில்லியில் புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவின் போது, பேரணியாக செல்ல முயன்ற மல்யுத்த வீரர், வீராங்கனையரை போலீசார் தடுத்து நிறுத்தியதுடன், குண்டுகட்டாக துாக்கி அப்புறப்படுத்தினர். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தவும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது; இதற்கு நாடு முழுதும் கண்டனம் எழுந்தது.


பிரிஜ் பூஷன் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படாததால் அதிருப்தி அடைந்த வீரர்கள், சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றபோது கிடைத்த பதக்கங்களை கங்கை நதியில் வீசப் போவதாக அறிவித்தனர்.

விவசாய சங்கங்களின் தலையீடு காரணமாக, பதக்கங்களை கங்கையில் வீசும் போராட்டத்தை அவர்கள் ஒத்தி வைத்துள்ளனர்.


இந்த விவகாரத்தில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பும் கருத்து தெரிவித்துள்ளது.'இன்னும், 45 நாட்களுக்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தேர்தல் நடத்தி புதிய தலைவரை தேர்வு செய்யாவிட்டால், அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, சர்வதேச கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.



பாலியல் சீண்டல்


இந்த விவகாரம் சர்வதேச முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், பிரிஜ் பூஷன் மீது அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து புதுடில்லி கன்னாட் பிளேஸ் போலீசார் கூறியதாவது: பிரிஜ் பூஜனுக்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனையர் ஆறு பேர் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில், ஒரு எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, 'மைனர்' வீராங்கனை சார்பில், அவரது தந்தை அளித்த புகாரின் படி, மற்றொரு எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது.


பாலியல் நோக்கத்துடன் உடல் பாகங்களை தொடுதல், பாலியல் சீண்டலில் ஈடுபடுதல், தவறான நோக்கத்தில் தவறான இடத்தில் தொடுதல் போன்ற செயல்களில் பிரிஜ் பூஷன் ஈடுபட்டதாக, அந்த வீராங்கனையர் புகார் அளித்துள்ளனர்.


இதன் அடிப்படையில், பெண்களின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்துதல், தாக்குவது, பாலியல் தொந்தரவு அளித்தல், பின் தொடருதல், முறையற்ற தொடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ், பிரிஜ் பூஷனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 28ம் தேதியே இந்த எப்.ஐ.ஆர்.,கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


இது குறித்து மல்யுத்த வீராங்கனையர் தனித் தனியாக போலீசில் வாக்கு மூலம் அளித்துள்ளனர். அதில், தங்களுக்கு பிரிஜ் பூஷன் எவ்வாறு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்தார், மறுப்பு தெரிவித்தவர்களை எப்படி மிரட்டினார், எப்படி அத்துமீறி நடந்து கொண்டார் என்பதை விளக்கமாக தெரிவித்துள்ளனர்.


மேலும், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டுமானால், பாலியல் ரீதியாக தான் சொல்வதை கேட்க வேண்டும் என அவர் மிரட்டியதாகவும் வீராங்கனையர் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்குகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், பிரிஜ் பூஷனுக்கு மூன்று ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.


இதற்கிடையே, தன் மீதான புகார்களை மறுத்துள்ள பிரிஜ் பூஷன், 'குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் துாங்கில் தொங்குவேன்' என, தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நாளை மறுநாள் பேரணி நடத்தப் போவதாக பிரிஜ் பூஷன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காததால், பேரணியை ஒத்தி வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனையரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள, 'பாரதிய கிஷான் யூனியன்' என்ற விவசாய சமூக அமைப்பின் ஆலோசனை கூட்டம், 'காப் மகாபஞ்சாயத்து' என்ற பெயரில், நேற்று ஹரியானா மாநிலம் குருஷேத்திராவில் நடந்தது.

இதில், 'வரும் 9ம் தேதிக்குள் பிரிஜ் பூஷனை கைது செய்யாவிட்டால், நாடு முழுதும் போராட்டம் வெடிக்கும். புதுடில்லி ஜந்தர் மந்தரில் விவசாய சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும்' என, முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


மல்யுத்த வீரர், வீராங்கனையரின் போராட்டத்துக்கு ஆதரவாக, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அனில் கும்ப்ளே, இர்பான் பதான் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, துப்பாக்கி சுடுதல் போட்டி வீரர் அபினவ் பிந்த்ரா ஆகியோரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்த விவகாரத்தில் அதிரடி முடிவு எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு

மல்யுத்த வீராங்கனையர் நடத்தும் போராட்டத்துக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த 1983ல் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த அணியில் இடம் பெற்றிருந்த சுனில் கவாஸ்கர், ரோஜர் பின்னி, ஸ்ரீகாந்த், மொகிந்தர் அமர்நாத், மதன் லால், செய்யது கிர்மானி உள்ளிட்டோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: புதுடில்லியில் நடந்த போராட்டத்தின் போது மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனையர் நடத்தப்பட்ட விதம் எங்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனினும், சட்டம் அதன் கடமையைச் செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. பதக்கங்களை துாக்கி வீசுவது போன்ற கடினமான முடிவுகளை அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (36)

K.n. Dhasarathan - chennai,இந்தியா
08-ஜூன்-202310:11:57 IST Report Abuse
K.n. Dhasarathan பிரிஜே பூஷனுக்கு இவ்வளவு ஆதரவு பி.ஜே.பி.அரசு கொடுப்பது ஏன்? நடவடிக்கை எடுங்க நடுங்குவது ஏன் ? ராகுல் காந்திக்கு மட்டும் ம்.பி. பதவியை பிடுங்குவதில், அரசு வீட்டை விட்டு துரத்துவதில் அதீத அக்கறை காட்டிய மத்திய அரசு, இப்போது மட்டும் தூங்குவது அல்லது தூங்குவது போல நடிப்பது ஏன் ? பயமா ? உலக அளவில் இந்த விவகாரம் போனபின்பும் அசட்டையாக இருக்கும் பி.ஜே.பி.அரசு வரும் தேர்தலில் இதன் விளைவுகளை சந்திக்கும் என்பதில் ஐயமில்லை. மேரி கொம் கொடுத்த விசாரணை அறிக்கை பற்றியும் வாயை திறக்கவில்லை , காலம் தாழ்த்த செய்யும் முயற்சி நேர் மாறான பதிலை கொடுக்கும்.
Rate this:
Cancel
நல்லவன் - chennai,இந்தியா
03-ஜூன்-202319:55:29 IST Report Abuse
நல்லவன் எப்படியோ, இவர்கள் எல்லாம் ஒண்ணு கூடினதால்தான் FIR பதிவு. நம்மெல்லாம் ஒன்னு கூடினாலொழிய அந்த கும்பலை தோலுரிக்க முடியாது. ஒரு பானைக்கு ஒரு சோறு......
Rate this:
Cancel
03-ஜூன்-202317:54:21 IST Report Abuse
AbiAravindh Trichy இதேபோல் பாடலாசிாியா் வைரமுத்து மீது 17 புகாா்கள் இருக்கிறது என்று சொல்கிறாா்கள்.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லையே.FIRகூட பதியப்படவில்லை அதற்கு இந்த மாதா்சங்கங்கள் போராடுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X