வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்: வாடிக்கையாளர்களுக்கு தரமான பால், குறைந்த விலையில் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பால் கொள்முதல் விலை அதிகரிக்கப்படும். தற்போது ஆவினில், 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் உள்ளது. இதை, 70 லட்சம் லிட்டராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
![]()
|
டவுட் தனபாலு: பால் உற்பத்தியாளர்கள் கரடியா கத்தும் போது கண்டுக்காம விட்டுட்டு, இப்ப நீங்களே முன்வந்து, 'பால் கொள்முதல் விலையை ஏத்துவோம்'னு சொல்றதுக்கு காரணம், 'அமுல்' நிறுவனத்தின் வரவு தான் என்பதில் 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: கடந்த ஒன்றரை ஆண்டுகளில், அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கியது தொடர்பாக, 165 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, காவல், வருவாய், மின் வாரியம் என, பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், 145 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள், 4 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கியுள்ளனர்.
டவுட் தனபாலு: புகார் வந்த இடத்துல, 'ரெய்டு' நடத்தி பிடிச்சது மட்டும் தான் இந்த, 4 கோடி... ஆனால், சி.பி.ஐ., கிட்ட கூட சிக்காத படி, அரசு அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் வாங்கி குவிச்சு வச்சிருக்கற லஞ்சப் பணம் பல நுாறு கோடி ரூபாய் இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: எத்தனையோ சோதனைகளை தாண்டி, கட்சி வீறுநடை போடுகிறது. ம.தி.மு.க.,வில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை. கட்சி நிர்வாகிகள் மத்தியில் நடந்த ஓட்டெடுப்பு வாயிலாகவே, துரை தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால் தான், இளைஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் இணைந்து வருகின்றனர். புதிய விடியலை நோக்கி, ம.தி.மு.க., பயணிக்கிறது.
![]()
|
டவுட் தனபாலு: என்ன தான் ஓட்டெடுப்பு நடத்தினாலும், எடுத்த எடுப்புலயே உங்க மைந்தனுக்கு தலைமை நிலைய செயலர் பதவியும், இப்ப முதன்மை செயலரா, 'புரமோஷனும்' கொடுத்திருக்கீங்க... இதுக்கு அப்புறமாவும், ம.தி.மு.க.,வில் வாரிசு அரசியல் இல்லைன்னு நீங்க சொல்றதை கேட்டு, உங்க மனசாட்சியே விழுந்து, விழுந்து சிரிக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement