வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தமிழக காங்., தலைவர் அழகிரி பேட்டி:
மன்னராட்சி நீங்கி, மக்களாட்சி வந்ததும் செங்கோலும் ஒதுக்கப்பட்டது. மன்னரிடம் இருந்த செங்கோல் ஒன்றும் புனிதமானது அல்ல. மீண்டும் மன்னர் ஆட்சியை கொண்டு வருவதற்கு அடையாளமாக செங்கோல் உள்ளது. மன்னர் ஆட்சி அமைக்க, பிரதமர் மோடி காணும் கனவு பலிக்காது.
![]()
|
மன்னர்களை போல, வாரிசு அரசியலை முன்னெடுக்கும், தி.மு.க., - காங்., கட்சியினர், மோடியை பார்த்து மன்னர் ஆட்சி அமைக்க கனவு காண்கிறார்னு விமர்சனம் செய்யுறது தான் சிறந்த காமெடி!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
காவிரி டெல்டா மாவட்டங்களில், துார்வாரும் பணிகள் மந்தமாக நடப்பது குறித்து கேள்வி எழுப்பியிருந்தேன். இந்நிலையில், துார்வாரும் பணிகளை, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்ய இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் முன், துார்வாரும் பணிகள் நிறைவடைவதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும், தலைமை பொறியாளரை அனுப்ப வேண்டும்.
கடந்த முறை முதல்வர் ஆய்வு நடத்திய போது, பணி முடிந்த இடங்களில், சிவப்பு கம்பளம் போட்டு வச்சிருந்த இடத்துல நின்னு, 'போஸ்' கொடுத்தாரு... இப்பவாச்சும் பணி நடக்கற இடத்துக்கு போய் பார்ப்பாரா?
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை
: 'ஒரு காலத்தில் வாத்தியார் தான், மாணவர்களை பிரம்பால் அடிப்பார். தற்போது, வாத்தியார்களை பிரம்பால் அடிக்கும் அளவிற்கு, மாணவர்கள் மாறி விட்டனர். அதையெல்லாம், 'அட்ஜஸ்ட்' செய்து தான், நீங்க பாடம் சொல்லி தரணும்' என, அமைச்சர் பொன்முடி அறிவுரை வழங்கி உள்ளார். தமிழகத்தின் சாபக்கேடு இதுபோன்ற அமைச்சர்கள். இது, சாராயத்தால் ஏற்பட்ட மாற்றம். அடுத்த தலைமுறையை சீரழிக்கும் அறிவுரை. இது தான், முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல்.
முதல்வர் எவ்வளவு தான் பாடம் நடத்தினாலும், இதுபோன்ற அமைச்சர்கள் தங்கள் வாயால், 'ஏழரை'யை இழுத்து விடுகின்றனர்!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை:
தமிழகத்தில் கடந்த வாரத்தில் மட்டும், மூன்று இடங்களில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற வருவாய் துறை, காவல் துறை அதிகாரிகள் மீது, மணல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதை, தி.மு.க., அரசு கண்டும், காணாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களை கடத்து வோரை, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகம் முழுதும், அ.ம.மு.க., சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
![]()
|
முதல்வர் கண்டிப்பா நடவடிக்கை எடுப்பார்... அதுக்குள்ள அவசரப்பட்டு போராட்டம் எதுவும் நடத்தி இவரு தமிழகத்தை, 'ஸ்தம்பிக்க' வச்சிட போறாரு!