வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி 5 முறை முதல் அமைச்சர் 13 முறை சட்டசபை உறுப்பினர் 75 திரைப்படங்களுக்கு கதை வசனம் 15 நுால்கள் 20 நாடகங்கள் 7,000 உடன்பிறப்பு கடிதங்கள் 210 கவிதைகள் மற்றும் கணக்கிலடங்கா சிறுகதைகள், தலையங்கம்,கேள்வி - பதில்கள் எழுதி ஈடு இணையற்ற பத்திரிகையாளராக திகழ்ந்தவர். இவரைப்பற்றி மட்டும் இதுவரை, 178 நுால்கள் வந்துள்ளன.
![]()
|
இந்திய அரசியலின் முதுபெரும் அரசியல்வாதியாக திகழ்ந்தவர், தி.மு.க., தலைவராக, 50 ஆண்டுகள் இருந்தவர், 20 வயதில் அரசியலிலும், சமூக இயக்கங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.
அவரது நுாறாவது பிறந்த நாள், ஜூன் 3ம் தேதியான இன்று துவங்குகிறது. திமுக., சார்பிலும், அரசு சார்பிலும் அவரது பிறந்த நாள், ஆண்டு முழுதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
![]()
|
அன்றாடம் காலை எழுந்தவுடன் நாள் தவறாமல் 'தினமலர்' படித்து, மறைந்த ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியுடன் தன் கருத்துக்களை பகிர்ந்தவர், தினமலர் மீது கொண்ட மதிப்பின் காரணமாக, தினமலர் நிறுவனர் அமரர் டி.வி.ஆர்.,நினைவு தபால் தலையை, 2008ம் ஆண்டில் வெளியிட்டவர். அவரது நுாறாவது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு, தினமலர் தன் வாழ்த்தை தெரிவிக்கிறது.