ஆத்துார்,-அ.தி.மு.க.,வின், -பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு, தெற்கு ஒன்றியம் சார்பில் புத்திரகவுண்டன்பாளையத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார். அதில் அவர் பேசியதாவது:
முன்னாள் முதல்வர்களான, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆகியோரின் பிறந்தநாளையொட்டி, ஜூன், 4ல்(நாளை) பெத்தநாயக்கன்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் உதயகுமார், நலத்திட்ட உதவி வழங்கி பேசுவார். வியூகம் அமைப்பதில் வல்லவராக, பொதுச்செயலர் பழனிசாமி உள்ளார். அவரது வியூகத்தில், அ.தி.மு.க., மெகா கூட்டணி, வரும் லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தி.மு.க., இத்தேர்தலில் காணாமல் போகும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, 180 கிளைகளை சேர்ந்த நிர்வாகிகள், பூர்த்தி செய்யப்பட்ட, 4,500க்கும் மேற்பட்ட உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவங்களை வழங்கினர். இதில், எம்.எல்.ஏ.,க்களான, ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி, ஒன்றிய, நகர செயலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.