வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை--உலகத் தமிழ் ஆராய்ச்சி பேரவையின் சார்பில், அடுத்த மாதம் 7, 8, 9 ஆகிய நாட்களில், சென்னையில் 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடக்க உள்ளது.
இதுகுறித்து, உலகத் தமிழ் ஆராய்ச்சி பேரவையின் நிர்வாகிகள் கூறியதாவது:
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் கல்வி நிறுவனத்தில், அடுத்த மாதம் 7, 8, 9 ஆகிய தேதிகளில், 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடக்க உள்ளது. இதில், 17 நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக வந்த, 1,057 கட்டுரைகளில், 350 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன; 200 கட்டுரைகள் அரங்கில் வாசிக்கப்படும். இதில் பங்கேற்க, கட்டுரையாளர்களுக்கு கட்டணம் இல்லை. பங்கேற்பாளர்களுக்கு, மூன்று நாட்களுக்கு 3,000 ரூபாய் கட்டணம்.
மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர், www//registration.icsts11.org/v என்ற இணைதள முகவரி யில் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த நிகழ்வில், உலகத் தமிழாராய்ச்சி பேரவையின் தலைவர் பொன்னவைக்கோ, துணைத் தலை வர் சுந்தரமூர்த்தி, செயலர் உலகநாயகி பழனி, மாநாடு ஏற்பாட்டுக்குழு தலைவர் ஜான் சாமுவேல், கட்டுரை ஒருங்கிணைப்பாளர் அர்த்தநாரீஸ்வரன், கவிஞர் விஜயகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.