சென்னை-கோடை விடுமுறை முடிந்து திரும்பும் மக்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 1,300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
வெள்ளி, சனி,ஞாயிறுகளில் பயணியர்வருகை அதிகமாக இருக்கும் என்பதால், அரசு போக்குவரத்து கழகங்களில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களோடு, நேற்று மாலை முதல் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
முக்கிய நகரங்களில் இருந்து வார இறுதி நாட்களில் சென்னைக்கு, 900 பஸ்கள்; மற்ற நகரங்களுக்கு, 400 பஸ்கள் என மொத்தம், 1,300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க, அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என, தமிழக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.