‛மனிதநேயம் மரிக்கவில்லை': ரயில் விபத்து பயணிகளுக்கு உதிரம் கொடுக்க குவிந்த மக்களின் நெகிழ்ச்சி
‛மனிதநேயம் மரிக்கவில்லை': ரயில் விபத்து பயணிகளுக்கு உதிரம் கொடுக்க குவிந்த மக்களின் நெகிழ்ச்சி

‛மனிதநேயம் மரிக்கவில்லை': ரயில் விபத்து பயணிகளுக்கு உதிரம் கொடுக்க குவிந்த மக்களின் நெகிழ்ச்சி

Updated : ஜூன் 03, 2023 | Added : ஜூன் 03, 2023 | கருத்துகள் (26) | |
Advertisement
புவனேஸ்வர்: ஒடிசாவின் பாலசோர் பகுதியில் விபத்து நடந்ததை குறித்து அறிந்த உடன் காயம் அடைந்தவர்களை காப்பாற்றும் வகையில் ரத்த தானம் செய்ய ஏராளமானோர் தாமாக முன்வந்து குவிந்தனர்.ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதிய விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும்
Odisha train accident: People queue up to donate blood for injured in Balasore‛மனிதநேயம் மரிக்கவில்லை': ரயில் விபத்து பயணிகளுக்கு உதிரம் கொடுக்க குவிந்த மக்களின் நெகிழ்ச்சி

புவனேஸ்வர்: ஒடிசாவின் பாலசோர் பகுதியில் விபத்து நடந்ததை குறித்து அறிந்த உடன் காயம் அடைந்தவர்களை காப்பாற்றும் வகையில் ரத்த தானம் செய்ய ஏராளமானோர் தாமாக முன்வந்து குவிந்தனர்.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதிய விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.


காயமடைந்த 900ம் பேர் பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் ஆயிரகணக்கான மக்கள், தாமாக முன்வந்து, ரத்தம் கொடுக்க மருத்துவமனைகளில் குவிந்துள்ளனர். இது மனித நேயம் இன்னும் மரிக்கவில்லை என்பதை காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.


இந்நிலையில், நேற்று இரவு முதல் சிகிச்சை அளிப்பதற்காக 3 ஆயிரம் யூனிட் ரத்தம் தானமாக கிடைத்துள்ளது.


இது தொடர்பாக கட்டாக் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கூறுகையில், நூற்றுக்கணக்கானோர் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்தனர். கட்டாக், பாலசோர் மற்றும் பத்ரக் ஆகிய பகுதிகளில் 3 ஆயிரம் யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
மீட்பு பணியில் ராணுவம்latest tamil news

சம்பவம் குறித்து அறிந்த உடன், தேசிய மற்றும் மாநில பேரிடர் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்திய ராணுவ வீரர்களும் நேற்று இரவு முதல் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கூடுதல் வீரர்கள் வந்து சேர்வார்கள் என ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


சம்பவ இடத்திற்கு 200 ஆம்புலன்சுகள், 45 மொபைல் மருத்துவ குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து (26)

R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
03-ஜூன்-202322:37:01 IST Report Abuse
R KUMAR பாணி பூரிகாரனும், பீடா காரனும்தான் ரத்தம் கொடுத்திருக்கானுக. இங்கே ரத்தம் கொடுத்தால், டாஸ்மாக் தான் ஓடும்.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
03-ஜூன்-202321:44:09 IST Report Abuse
Mohan பானிபூரிகாரன் உடலில் ஓடுவது இரத்தம். கொடுத்திருக்கான். இங்க, 12மணிக்கு மேல ஓடுவது ?
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
03-ஜூன்-202316:56:52 IST Report Abuse
Mohan இந்த கோரமண்டல் கோர கொடூரம் இங்கே நடந்திருந்தால் ,இங்குள்ளவர்களில் பெரும்பான்மையோர் இரத்தம் கொடுக்க முடிந்திருக்குமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X