சென்னை: ரயில் விபத்து தொடர்பாக ஒடிசா அரசிடம் இருந்து தொடர்ந்து, களநிலவரம் குறித்து தகவல்களை கேட்டு வருகிறோம் என பேரிடர் மீட்பு பணித் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் கூறியுள்ளார்.
மேலும், அவர் கூறியிருப்பதாவது: ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் விபரம் மாலைக்குள் தெரியவரும். 2 பெட்டிகளில் பயணத்தவர்கள் கணக்கெடுப்பு இன்னும் முடியவில்லை. இதுவரை 8 பேர் உதவி கேட்டு நமது உதவி மையத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.
சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவ குழுவினர் தயாராக உள்ளனர். ஒடிசா முதல்வர், தலைமைச் செயலாளரிடம் முதல்வர் ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் எனக் கூறினார்.