புதுடில்லி: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். மீட்பு பணிகள், நிவாரணம், ரயில் விபத்து, சிக்னலை தாண்டி ரயில் எப்படி சென்றது உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஒடிசா சென்றார்
தொடர்ந்து, ரயில் விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்திற்கு பிரதமர் மோடி சென்று ஆய்வு
மேற்கொண்டார். அப்போது பிரதமர் மோடி உடன் மத்திய அமைச்சர்கள் அஷ்வினி வைணவ் உள்ளிட்டோர் இருந்தனர்.