பாலசோர்: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் 1,200 பேர் எந்த பாதிப்பும் இன்றி உயிர் தப்பியது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தென் கிழக்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: தடம் புரண்ட கோரமண்டல் ரயில் பெட்டி மீது பெங்களூரு - ஹவுரா அதி விரைவு ரயில் மோதியது. இந்த ரயிலில் பயணித்த 1,200 பேருக்கு எந்த பாதிப்பும் இல்லை.
சேதம் அடைந்த பெட்டிகளை தவிர்த்து மீதம் உள்ள பெட்டிகளுடன் ஹவுரா ரயில் கிளம்பியது. மணிக்கு 10 கி.மீ., வேகத்தில் ரயில் செல்கிறது. பொது இருக்கைகளில் பயணித்தவர்களுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.