சென்னை: கோரமண்டல ரயில் விபத்தில் சிக்கியிருக்கும் தமிழர்களுக்கு உதவி செய்ய பாஜ., உதவி குழு ஒடிசா செல்கிறது என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ரயில்கள் மோதிக் கொண்ட கோர சம்பவம் நாட்டில் அனைவரையும் அதிர்ச்சிக்கும், துக்கத்திற்கும் ஆட்படுத்தியுள்ளது. தமிழக பாஜ., குழு விபரம்:
ரவிச்சந்திரன், ஜெயக்குமார், பிரசாத் ஆகிய 3 பேரை விபத்தில் சிக்கியவர்கள் எவ்வித உதவி தேவைப்பட்டாலும் இவர்களை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.