மயிலாடுதுறை: திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கூறியிருப்பதாவது: ரயில் விபத்து துரதிஷ்டவசமானது. இதில் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பும், காயம் ஏற்பட்டிருப்பது நாடெங்கும் பெரும் துயரத்தை விளைவித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம். மீட்பு பணிகள் செம்மையாக நடைபெறவும், காயமுற்றோர் விரைவில் நலம் பெற வேண்டி நமது ஆன்மாத்த மூர்த்திகளாகிய ஸ்ரீ ஞானமா நடராஜப் பெருமான் திருவடிகளைப் பிரார்த்திக்கின்றோம்.
மத்திய அரசு, மாநில அரசுகள் ஒன்றிணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு மக்களை காப்பாற்றும் பணி பாராட்டுக்குரியது. இத்தகைய பணியில் ஈடுபட்டுள்ளோர் மனவலிமையுடன் பணியாற்ற பிரார்த்திக்கின்றோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.