வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: தினமலர் நாளிதழ் மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோவை, ரயில்வே ஸ்டேஷனில் இன்று(ஜூன் 4) நடந்தது.

தினமலர் நாளிதழ் மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த நம் சகோதர, சகோதரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோவை, ரயில்வே ஸ்டேஷனில் காலை 11:00 மணிக்கு துவங்கியது. நிகழ்ச்சியில் கோவை ரயில்வே ஸ்டேஷன் இயக்குனர் பவன் குமார் வர்மா, ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் ஶ்ரீதரன், ரயில்வே ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், துப்புரவு பணியாளர்கள், அரசு ஊழியர்கள் என, அனைத்து தர மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
மாலை வ.உ.சி., மைதானத்தில்
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த, நம் சகோதர, சகோதரிகளுக்கு, ‛தினமலர்' சார்பில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, கோவை - அவிநாசி ரோட்டில் உள்ள, வ.உ.சி., மைதானத்தில், இன்று (ஜூன்.,4)ம் தேதி, மாலை, 5:30 மணிக்கு நடைபெற்றது.
‛பாதியில் முடிந்த பயணம்... பகிரவே முடியாத துயரம்!
ஈரமுள்ள நெஞ்சங்களின் இரங்கல்களால்
துயரமும் பாரமும் தொலையட்டும்!
அன்பானவர்களின் அஞ்சலியால் அந்த ஆன்மாக்கள் அமைதியில் இளைப்பாறட்டும்!
