வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஒடிசா ரயில் விபத்து காரணமாக 58 ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டு்ளளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு ஒடிசா ரயில் விபத்தில் 288 பேர் பலியாகினர் 1000 பேர் காயமடைந்தனர். இந்த சம்வம் தொடர்பாக இன்று மத்திய ரயில்வே அமைச்சக செய்தி தொடர்பாளர் அமிதாப் ஷர்மா கூறியது, ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
![]()
|
மீட்பு பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது .இந்த விபத்து காரணமாக 58 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 81 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. 10 ரயில்கள் சேவை பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.