வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புவனேஸ்வர்: ரயில் விபத்து சம்பவத்தை அடுத்து ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக்கை தமிழக அமைச்சர்கள் சந்தித்து பேசினர்
![]()
|
ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. நாடுமுழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஒடிசா முதல்வரை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்பு கொண்டு மாநிலத்திற்கு தேவைப்படும் உதவிகள் அனைத்தையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.
இதனை தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தலைமையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழுவினர் ஒடிசா சென்றனர்.
இதனிடையே அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக்கை சந்தித்து பேசினர் சந்திப்பின்போது ஒடிசா மாநிலத்திற்கு தேவைப்படும் உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
![]()
|
அதே போல் தமிழர்களுக்கு தேவையான நலன்களை ஒடிசா அரசு வழங்கும் எனவும் நவீன்பட்நாயக் தமிழக அமைச்சர்களிடம் உறுதி அளித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement