வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஊட்டி : ஊட்டி அருகே கல்லுாரி மாணவி தற்கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஊட்டி அருகே தொட்டன்னிபகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பரது மகள் பிரியதர்ஷினி, 19 அவிநாசியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். விடுமுறைக்கு வந்த, பிரியதர்ஷினி, கடந்த, 30ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி தற்கொலையில் சந்தேகம் எழுந்ததால், பெற்றோர் கோத்தகிரி போலீசில் புகார் அளித்தனர்.
ஊட்டி ஆர்.டி.ஓ., துரைசாமி உத்தரவின் பேரில், நேற்று முன்தினம் வருவாய்துறை, போலீசார் முன்னிலையில், மருத்துவ குழுவினர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'மாணவியின் பக்கத்து வீட்டை சேர்ந்த நந்தகுமார், 28, என்பவர் மாணவியை காதலித்து பாலியல் தொல்லை கொடுத்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தற்கொலை செய்து கொண்டார். நந்தகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.' என்றார்.