ஊட்டி : ஊட்டியில் நடக்கும் துணை வேந்தர்கள் கருத்தரங்கில் பங்கேற்க நேற்றிரவு கவர்னர் ரவி ஊட்டி வந்தார்.
ஊட்டி ராஜ்பவனில் 5 ம் தேதி முதல் 7 ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பங்கேற்கும் கருத்தரங்கு நடக்கிறது. தவிர, வேறு சில நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த கருத்தரங்கில் பங்கேற்க கவர்னர் ரவி, சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவையிலிருந்து சாலை மார்க்கமாக கோத்தகிரி வழியாக நேற்றிரவு, 7:10 மணிக்கு ஊட்டி ராஜ்பவன் வந்தார். கவர்னர் ரவியை நீலகிரி கலெக்டர் அம்ரித், எஸ்.பி., பிரபாகர் புத்தகம் கொடுத்து வரவேற்றனர். நிகழ்ச்சிகளை முடித்து வரும், 9 ம் தேதி ஊட்டியிலிருந்து சென்னை செல்கிறார்.