காஞ்சிபுரம்:காஞ்சி காமகோடி, 68வது பீடாதிபதி மஹா சுவாமிகள் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 130வது ஜெயந்தி விழா நேற்று சங்கர மடத்தில் விமரிசையாக நடந்தது. நேற்று மதியம், மஹா சுவாமிகள் அதிஷ்டானத்தில் அபிஷேகம் முடிந்து, தீபாராதனை நடந்தது.
மூன்று நாட்கள் சங்கர மடத்தில் நடந்த விழாவில், தினசரி காலை வேதபாராயணம், உபன்யாசம், நாம சங்கீர்த்தனம் நடந்தது; மாலையில் இசை கச்சேரி நடந்தது.
இந்நிலையில், நேற்று காலை ருத்ர பாராயணம், பூஜை, ஹோமம் ஆகியவை நடைபெற்றன. நேற்று மதியம் 12:00 மணிக்கு ஹோமம் நிறைவடைந்து, அங்கிருந்த புனித நீர் கலசம் எடுத்து சென்று மஹாசுவாமிகள் அதிஷ்டானத்தில் அபிஷேகம் நடந்தது.
பின், மதியம் 1:00 மணிக்கு அலங்காரம் முடிந்து தீபாராதனை நடந்தது. காலையில் இருந்து, அதிஷ்டானத்தில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.