திருத்தணி:திருத்தணி நகராட்சியில், மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் 6 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால்வாய் மற்றும் சிறுபாலங்கள் அமைக்கும் பணிகள் ஏழு இடங்களில் நடக்கிறது.
அதில், திருத்தணி ம.பொ.சி.சாலை பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
குறிப்பாக ரயில் நிலையம் செல்லும் சாலை மற்றும் கடைகள் அதிகளவில் இருக்கும் ம.பொ.சி., சாலை, சிண்டிகேட் வங்கி பகுதியில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடந்து வருகின்றன.
இதனால், குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் வெளியே செல்ல வழியின்றி நெடுஞ்சாலையில் தேங்கி ஆறாக ஓடுகிறது. மேலும், திருத்தணி ரயில் நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வர சிரமப்படுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.