காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கீழ்கதிர்பூரில் உள்ள விவசாய நிலம் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், கீழ்கதிர்பூரில் இருந்து, குண்டுகுளம் செல்லும் சாலையோரத்தில் உள்ள ஒரு மின்கம்பத்தில் சிமென்ட் காரை உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் சிதிலமடைந்து உள்ளது.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள், லேசாக மின் கம்பத்தின் மீது உரசினாலோ, பலத்த காற்றுடன் மழை பெய்தாலோ மின் கம்பம் விழும் நிலையில் உள்ளது.
எனவே, சிதிலமடைந்த பழைய மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.