வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை சந்திக்க நாளை ( ஜூன்04) ஒடிசா செல்கிறார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா. நேற்று ([ஜூன்03) இரவு ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் மோதிய சம்பவத்தில் 288 பேர் பலியாகினர், 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சம்பவ இடத்தை பிரதமர் மோடி இன்று நேரில் பார்வையிட்டார். காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
![]()
|
இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் புவனேஸ்வரம் எய்ம்ஸ் மருத்துவமனையிலும், கட்டாக் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா நாளை (ஜூன் 04) சந்திக்கிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement