வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்தது நெகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது, விபத்து நடந்த களத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் பாராட்டுகிறேன். காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் அளிக்க நீண்ட வரிசையில் மக்கள் நின்றது நெகிழ்ச்சி அளிக்கிறது.
![]()
|
தவிர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உலக தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டது எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக தலைவர்களின் அன்பான வார்த்தைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சக்தியை தரும். இவ்வாறு அவர் கூறினார்.