சென்னை:''பயணியரின் முன்பதிவு விபரங்களை வைத்து, அடையாளம் கண்டு வருகிறோம். மேலும், காயம் இன்றி தப்பியவர்களை அழைத்து வர ஏற்பாடுகளை செய்து வருகிறோம்,'' என, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரி கணேஷ் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
விபத்துக்குள்ளான கோரமண்டல் விரைவு ரயிலில், சென்னை வர, 867 பேர் முன்பதிவு செய்து இருந்தனர். பயணியர் முன்பதிவு விபரங்களை வைத்து, அடையாளம் கண்டு வருகிறோம். காயம் இன்றி தப்பியவர்கள், சிறப்பு ரயில் வாயிலாக, சென்னை அழைத்து வரப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரயில்வே போலீஸ் எஸ்.பி., பொன்ராமு கூறியதாவது:
சென்ட்ரல் உதவி மையத்தை பயணியர் சுலபமாக கையாளும் வகையில், 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இறந்தவர்களில் தமிழத்தை சேர்ந்தவர்கள் விபரம், இதுவரை எங்களுக்கு வரவில்லை.
தகவல் மையத்தை தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு, ரயிலில் பயணம் செய்தவர் விபரம், அவர்களின் நிலை குறித்து, உடனுக்குடன் தகவல்களை தெரிவித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.