இம்ரான் கான் ஆபத்தான மனிதர் பாக்., ராணுவ அமைச்சர் எச்சரிக்கை
இம்ரான் கான் ஆபத்தான மனிதர் பாக்., ராணுவ அமைச்சர் எச்சரிக்கை

இம்ரான் கான் ஆபத்தான மனிதர் பாக்., ராணுவ அமைச்சர் எச்சரிக்கை

Updated : ஜூன் 04, 2023 | Added : ஜூன் 04, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
இஸ்லாமாபாத், ''முன்னாள் பிரதமர் இம்ரான் கான், வெளிநாடுகளில் உள்ள நம் எதிரிகளை விட மிக ஆபத்தான மனிதர்,'' என, பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப் கூறினார்.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப், பாக்., செய்தி நிறுவனத் திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:வெளிநாடுகளில் உள்ள நம் எதிரிகள் யார் என்பது நமக்கு தெரியும். ஆனால், நம் நாட்டிற்குள்ளேயே
 Imran Khan is a dangerous man, warns Pakistan Army Minister   இம்ரான் கான் ஆபத்தான மனிதர் பாக்., ராணுவ அமைச்சர் எச்சரிக்கை



இஸ்லாமாபாத், ''முன்னாள் பிரதமர் இம்ரான் கான், வெளிநாடுகளில் உள்ள நம் எதிரிகளை விட மிக ஆபத்தான மனிதர்,'' என, பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப் கூறினார்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப், பாக்., செய்தி நிறுவனத் திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

வெளிநாடுகளில் உள்ள நம் எதிரிகள் யார் என்பது நமக்கு தெரியும். ஆனால், நம் நாட்டிற்குள்ளேயே நமக்கு எதிரிகள் உள்ளனர். அவர்கள் நம்மிடையே உலவுகின்றனர். அவர்களை நம்மால் எளிதில் அடையாளம் காண முடிவது இல்லை.


latest tamil news


பாகிஸ்தானுக்கு வெளியில் உள்ள மிகப் பெரிய எதிரி என்றால், அது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான்.

ஆனால், அவரை விட இம்ரான் கான் ஆபத்தான மனிதர். அவர், நம் கண் முன்பே உலவுகிறார்.

இம்ரான் கான் போன்றவர்கள் நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்.

கடந்த மே 9ல், இம்ரான் கான் கைது செய்யப்பட்டபோது, அவரது ஆதரவாளர்கள் எப்படி வன்முறையை துாண்டி விட்டனர் என்பதை பார்த்தோம். இம்ரான் கான் ஆபத்தானவர் என்பதற்கு இந்த சம்பவம் நல்ல உதாரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

karupanasamy - chennai,இந்தியா
06-ஜூன்-202316:05:15 IST Report Abuse
karupanasamy தன்னைத்தவிர மற்ற அனைவரையும் எதிரியாக பார்க்க சொல்லுகிறதோ?
Rate this:
Cancel
04-ஜூன்-202317:41:28 IST Report Abuse
அப்புசாமி கூடப் பொறந்தவங்களையே கொன்னுட்டு ராஜாவாக முடிசூட்டிக்கிட்டவர் கேக்கவா வேணும்?
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
04-ஜூன்-202306:02:19 IST Report Abuse
BALU இன்னமும் திருந்தாமல் நமது இந்தியப் பிரதமர் மோடியை எதிரி என நினைத்து வஞ்சம் கக்கும் பாக்கிஸ்தானியர்களே, இனி நீங்கள் உங்களுக்குள்ளாகவே அடித்துக் கொண்டு சாகுங்கள்.இந்த பூமி அமைதி பெறட்டும்.
Rate this:
Senthoora - Sydney,ஆஸ்திரேலியா
04-ஜூன்-202307:49:29 IST Report Abuse
Senthooraஇம்ரான்கான் பரவாய் இல்லை, இவரின் ஆட்கள் இதுவரை எதனை அரசியல் தலைவர்களை போட்டு தள்ளி இருக்கிறார்கள். இம்ரான் செய்த தவறு, கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபாடும், தாயாரின் வைத்தியசாலையும் பார்த்துகிட்டு இருந்திருக்கலாம். அரசியல் சாக்கடைக்கு வந்தது தவறு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X