பந்தலூர்;மழைக்கு பின் பசுமைக்கு மாறிய முதுமலையில் மான், யானை உள்ளிட்ட வன விலங்குகள் கூட்டமாக உலா வருகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், காய்ந்து காணப்பட்ட வனப்பகுதி தற்போது பசுமைக்கு மாறி உள்ளது. இதனால் முதுமலை செல்லும் சாலை ஓரங்களில் அதிக அளவு மான் கூட்டங்களை காண முடிகிறது. இதில் மான் கூட்டங்களுக்கு மத்தியில் யானைகளும் வந்து மேய்ச்சலில் ஈடுபடுவது அவ்வப்போது காண முடிகிறது.
மழைக்குப்பின் வனத்தின் உள் பகுதியில் போதிய அளவு தண்ணீர் மற்றும் உணவு இருப்பதால் வனவிலங்குகள் வெளியில் வருவது குறைந்துள்ளது. மான் கூட்டங்களுக்கு இடையே, மேய்ச்சலில் ஈடுபடும் யானைகளும் சுற்றுலா பயணிகளை ரசிக்க வைக்கிறது. அங்கிருந்து செல்ல மனமில்லாத சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் ரசித்து போட்டோ எடுத்து செல்கின்றனர்.