வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சமீபத்தில் காங்., முன்னாள் தலைவர் ராகுல் புதுடில்லியிலிருந்து, பஞ்சாப் தலைநகர் சண்டிகருக்கு இரவில் லாரியில் பயணம் செய்து அசத்தினார்.
சாமான்ய மக்களிடமிருந்து காங்., விலகி வருகிறது என்ற குற்றச்சாட்டுகள் வருவதை அடுத்து, அவர்களுடன் நெருங்கிப் பழக விரும்புகிறாராம் ராகுல்.
இதனால்தான் ராகுல் விமான பயணத்தை தவிர்த்து, லாரியில் பயணம் செய்து, நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பல டிரைவர்களை சந்தித்து பேசினார்.
இதையடுத்து இன்னொரு அதிரடி முடிவையும் ராகுல் எடுத்துள்ளார்.
இனி, புதுடில்லியில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு செல்லும் அவர் அங்கு கார் பயணத்தை தவிர்த்து ரயில் வழியாக பயணம் செய்யவிருக்கிறார்.
![]()
|
விரைவில் தமிழகம் வரும் ராகுல், இங்கு உள்ளூர் மின்சார ரயில் மற்றும் 'மெட்ரோ' ரயிலில் பயணம் செய்யப் போகிறார். ஒரு சாமான்ய மனிதர் போல, மக்களோடு மக்களாக பயணித்து அவர்களுடன் பேச திட்டமிட்டுள்ளாராம்.
இது மட்டுமல்லாமல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோவைக்கும், எழும்பூரிலிருந்து திருச்சி அல்லது மதுரைக்கும் ராகுல் ரயிலில் பயணம் செய்யப் போகிறாராம். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு பிரச்னை என சொல்லி ராகுலின் ரயில் பயணங்கள் ரத்து ஆகாது எனவும் சொல்லப்படுகிறது.