வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கரூரில் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனைக்கு சென்றபோது தி.மு.க.,வினர் அதிகாரிகளை தாக்கினர். இந்த விவகாரம் உடனடியாக மத்திய வருவாய் செயலர் சஞ்சய் மல்ஹோத்ராவிற்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே தமிழக தலைமை செயலர் மற்றும் டி.ஜி.பி.,யுடன் பேசினார்.
இந்த அதிகாரிகள் போதுமான பாதுகாப்பு தருவதாக உறுதி அளித்தும், 'பாதுகாப்புக்கு தமிழக போலீசார் தேவையில்லை; மத்திய துணை ராணுவப்படையும் பாதுகாப்பு தர வேண்டும்' என சஞ்சய் மல்ஹோத்ரா உத்தரவிட்டாராம். அடுத்த 30 நிமிடங்களில் மத்திய துணை ராணுவம் பாதுகாப்பிற்காக வந்துவிட்டது.
![]()
|
இந்த தாக்குதல் விவகாரம் பற்றி பிரதமர் அலுவலகத்திற்கும் சொல்லப்பட்டதாம். இதையடுத்து, இந்த சோதனை எப்படி நடக்கிறது, இதற்கு ஏதாவது தடங்கல்கள் உண்டா என பிரதமர் அலுவலகமும் கண்காணித்து வந்ததாம்.
செந்தில் பாலாஜியைத் தவிர, தி.மு.க., குடும்பத்தின் ஒரு முக்கிய நபரும் விரைவில் சிக்குவார் என கூறப்படுகிறது. ' பல மாதங்களாக செயல்பட்டு இவருக்கு எதிராக பல ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன; இனி தி.மு.க.,விற்கு சிக்கல் தான்' என்கின்றனர் மத்திய அரசின் உயரதிகாரிகள்.