வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை அடுத்து, காங்., முன்னாள் தலைவர் சோனியா, முன்னாள் எம்.பி., ராகுல், காங்., பொதுச்செயலர் பிரியங்கா மற்றும் கட்சி தலைவர்கள் படு உற்சாகத்தில் உள்ளனர். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, வரும் 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிட ஏற்பாடுகளை செய்து வருகிறது காங்., கட்சி.
சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பில் ராகுலின் புகழ் உயர்ந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இதையெல்லாம் வைத்து, வரும் லோக்சபா தேர்தலில் 'பா.ஜ., அவுட்' என்கின்றனர் காங்கிரஸ் சீனியர் தலைவர்கள்.
அடுத்த ஆட்சி காங்., தலைமையில் கூட்டணி ஆட்சிதான் என அவர்கள் அடித்து சொல்கின்றனர். இந்நிலையில், புதுடில்லி அரசியல் வட்டாரங்களில் ஒரு பட்டியல் உலா வருகிறது. அது, காங்., தலைமையிலான கூட்டணி அரசின் அமைச்சர்கள் பட்டியல்.
இதில், ராகுல் பிரதமராம். காங்கிரசின் செய்தித் தொடர்பாளராக உள்ள ஒரு பெண்மணி தான் அடுத்த நிதி அமைச்சராம். நம்ம ஊர் நிதி அமைச்சராக இருந்தவருக்கு துணை ஜனாதிபதி பதவியாம். இப்படி 'லிஸ்ட்' நீள்கிறது.
'கனவு காண்பதை யாரும் தடுக்கவில்லை; ஆனால் அதற்கு ஒரு எல்லை வேண்டாமா' என கிண்டலடிக்கும் பா.ஜ.,வினர், வரும் 2024 லோக்சபா தேர்தலிலும் மோடி தான் பிரதமர் என்கின்றனர்.