'ரெய்டு'க்கு போகாத அதிகாரிகளுக்கு 'ரிவிட்!'
'ரெய்டு'க்கு போகாத அதிகாரிகளுக்கு 'ரிவிட்!'

'ரெய்டு'க்கு போகாத அதிகாரிகளுக்கு 'ரிவிட்!'

Updated : ஜூன் 04, 2023 | Added : ஜூன் 04, 2023 | |
Advertisement
''லஞ்சமா கொடுக்குற பணத்தையெல்லாம், ஜனங்ககிட்ட வசூல் செஞ்சிடுதாவ வே...'' என்றபடியே பேச்சை ஆரம்பித்தார் அண்ணாச்சி.''என்ன விவகாரம் பா...'' எனக்கேட்டார் அன்வர்பாய்.''கோவை மாவட்டம், அன்னுாரைச் சுற்றியுள்ள பகுதிகளில், ஒரே, 'பர்மிட்'டை வச்சுகிட்டு சட்டவிரோதமா தினமும், 50க்கும் அதிகமான, 'லோடு' மண் அள்ளுதாவ... இதை கண்காணிக்கும் மாவட்ட பொறுப்பு வி.ஐ.பி.,யின் ஆட்கள், ஒரு
Revit!   'ரெய்டு'க்கு போகாத அதிகாரிகளுக்கு 'ரிவிட்!'''லஞ்சமா கொடுக்குற பணத்தையெல்லாம், ஜனங்ககிட்ட வசூல் செஞ்சிடுதாவ வே...'' என்றபடியே பேச்சை ஆரம்பித்தார் அண்ணாச்சி.

''என்ன விவகாரம் பா...'' எனக்கேட்டார் அன்வர்பாய்.

''கோவை மாவட்டம், அன்னுாரைச் சுற்றியுள்ள பகுதிகளில், ஒரே, 'பர்மிட்'டை வச்சுகிட்டு சட்டவிரோதமா தினமும், 50க்கும் அதிகமான, 'லோடு' மண் அள்ளுதாவ... இதை கண்காணிக்கும் மாவட்ட பொறுப்பு வி.ஐ.பி.,யின் ஆட்கள், ஒரு லோடுக்கு இவ்வளவுன்னு, 'கட்டிங்'கை, 'கரெக்ட்'டா வசூல் செய்யுதாவ...

''ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒன்றிய நிர்வாகி ஒருத்தர் தன்னையும், 'கவனிக்க' சொல்லி தகராறு செய்யுதாரு... பணம் தராத லாரிகளை, கனிம வளத்துறை
மற்றும் காவல் துறையில சிக்க வச்சிடுதாரு...


latest tamil news


''ஒரு லோடுக்கு, ரெண்டு தரப்புக்கும் பணம் கொடுக்க வேண்டி இருப்பதால, மண் லாரி உரிமையாளர்கள் மண் விலையை தாறுமாறா ஏத்திட்டாவ... இதுல பாதிக்கப்படுறது என்னவோ அப்பாவி ஜனங்க தாம் வே...'' என்றார் அண்ணாச்சி.

''சென்னை மாநகராட்சி கூட்ட அரங்குல, முதல்வர் ஸ்டாலின், 'போட்டோ' மாட்டப்பட்டதுக்கு, காங்கிரஸ் கவுன்சிலர் தான் காரணம் தெரியுங்களா...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.

''என்ன ஓய் குழப்புறீர்...'' எனக்கேட்டார் குப்பண்ணா.

''சென்னையை தவிர, நாட்டின் பிற, 'மெட்ரோபாலிட்டன்' நகர மாநகராட்சியின் கூட்ட அரங்கங்களில், மாநில முதல்வர்களின் புகைப்படத்தை மாட்டியிருக்காங்க...

''சென்னை மாநகராட்சியில, முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை மாட்ட சொல்லி, மாநகராட்சி காங்கிரஸ் தலைவர் திரவியம், கடந்த எட்டு மாசமா குரல் கொடுத்துட்டு வந்தாருங்க...

''ஒரு கட்டத்துல விரக்தி அடைஞ்சவரு, 'மாநகராட்சி சார்புல முதல்வர் படத்தை வைக்கலன்னா, நானே வச்சிடுவேன்'னு பொங்கிட்டாருங்க... இவரது பாசத்தை கண்டு புல்லரிச்சு போன ஆளுங்கட்சி தரப்பு, ஒருவழியா முதல்வர் படத்தை கூட்ட
அரங்குல மாட்டிட்டாங்க...

''கொஞ்ச நாளாகவே, முதல்வர் ஸ்டாலினுக்கும், சென்னையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவருக்கும், காங்கிரஸ் கவுன்சிலர் திரவியம் அடிக்கிற, 'ஜால்ரா' காதை கிழிக்குதாம்... 'எப்ப வேணாலும் இவர் தி.மு.க., பக்கம், 'ஜம்ப்' ஆகிடுவாரு'ன்னு, காங்கிரஸ் தரப்புல, 'கிசுகிசு'க்குறாங்க...'' என்றார்
அந்தோணிசாமி.

''அதிகாரிகளை அலற விடறார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''ஈரோடு மாவட்ட கலெக்டரா, ராஜகோபால் சுன்கரா சமீபத்துல பொறுப்பு ஏத்துண்டாரோன்னோ... மனுஷன் படு, 'ஸ்ட்ரிக்ட்'டா இருக்காராம்...

''கள்ளச்சாராயம், கஞ்சா, சட்டவிரோத மது விற்பனை சம்பந்தமா, மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தை சமீபத்துல கூட்டினார்... இதுல, டாஸ்மாக் மேலாளர்கள், வருவாய் துறை, கலால் துறை, மதுவிலக்கு போலீஸ் அதிகாரிகள் கலந்துண்டா...

''போலீசும், வருவாய் துறையும் களத்துக்கு, 'ரெய்டு' போகாமயே, 100 மது பாட்டில்களையும், ஒரு கிலோ கஞ்சா பாக்கெட்டையும் பிரிச்சு, 10 - 15 பேர் மேல கேஸ் போட்டு, கைது பண்ற தகிடுதத்தம் கலெக்டருக்கு தெரிஞ்சுடுத்து...

''துறை அதிகாரிகளை தனித்தனியா அழைச்சு, 'களத்துக்கு போகாம, உட்கார்ந்த இடத்துல இருந்தே வேலை பார்க்குறது இனி நடக்காது... மொத்த சப்ளையர், குடோன் ஆட்களை விட்டுட்டு, விற்பனை செய்யுறவங்களை மட்டும் கைது செஞ்சா போதாது...

'ஒரே இடத்துல, 'சீட்'டை தேய்க்காம, களத்துல இறங்கி வேலை பார்க்கலன்னா, வீட்டுக்கு அனுப்பிடுவேன்'னு எச்சரிச்சாராம்... இதனால, அதிகாரிகள் மந்திரிச்சுவிட்ட மாதிரி திரியறா ஓய்...'' என்றார் குப்பண்ணா. அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X