வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தமிழக அமைச்சர் ஒருவரிடமிருந்து ஒரு வேண்டுகோள் வந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் வாய் திறக்க மறுத்தாலும், ஓரளவு விபரங்கள் வெளியே கசிந்துள்ளன.
அந்த தமிழக அமைச்சர் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டுள்ளாராம். இந்த வேண்டுகோளுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து, இதை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாம்.
இந்த அமைச்சர் எதற்காக நான்கு மாதங்கள் வெளிநாட்டில் இருக்க விரும்புகிறார்; வரும் லோக்சபா தேர்தலின் போதுதான் அவர் இந்தியா வருவாரா என பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இது தொடர்பான கோப்பு இப்போது வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறதாம். அமைச்சர் ஜெய்சங்கரும் இதைப் பற்றி வாய் திறக்க மறுக்கிறாராம்.