வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தமிழக ஆதீனங்கள் ஆசியுடன், புதிய பார்லி.,யில் செங்கோல் நிறுவப்பட்டது. இதற்கு காங்., உட்பட பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, திறப்பு விழாவையும் புறக்கணித்தன.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அடுத்த மாபெரும் விழாவிற்கு பிரதமர் மோடி தயாராகி வருகிறார். அது, அயோத்தி யில் நடக்கவிருக்கும் ராமர் கோவில் திறப்பு விழா. வரும் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, ௨௦௨௪ ஜனவரியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது.
இதையடுத்து, ஜனவரியிலிருந்து ராம நவமியான ஏப்ரல் 17 வரை அயோத்தி ராமர் கோவிலில் தொடர்ந்து விழாக்கள் நடைபெற உள்ளதாம்.

நம் அண்டை நாடுகளான பூடான், இலங்கை மற்றும் கிழக்காசிய நாடுகளான தாய்லாந்து, இந்தோனேஷியா உட்பட உலகத்தில் உள்ள 400க்கும் மேற்பட்ட நதிகளின் புனித நீர் எடுத்து வரப்பட்டு ராமருக்கு அபிஷேகம் செய்யப்பட உள்ளதாம்.
பார்லிமென்ட் திறப்பு விழா எப்படி விமரிசையாக கொண்டாடப்பட்டதோ, அதைவிட பல மடங்கு பெரிய அளவில் கொண்டாட மத்திய பா.ஜ., அரசு திட்டம் தீட்டி உள்ளதாம்.