வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஒடிசா ரயில் விபத்து காரணமாக 95 ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஒடிசாவில் ரயில் விபத்தில் 288 பேர் பலியாகினர் 1000 பேர் காயமடைந்தனர். மீட்பு பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் தென்கிழக்கு ரயில்வே பிராந்தியத்தில் பயணிக்கும் 95 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 95 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 46 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.
ஒடிசாவில் தண்டவாள சீரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளர்கள் தண்டவாளங்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விபத்து நடந்த தண்டவாளங்கள் வழியாக செல்லும், ரயில்கள் சீரமைப்பு பணி காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.