சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இன்றைய நிகழ்ச்சியில்
சில தினங்களுக்கு முன், கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே பள்ளக்காடு பகுதியில், அரசு அனுமதி பெறாமல், சட்ட விரோதமாக, 80 அடி உயரத்துக்கு, 'மெகா சைஸ்' விளம்பர பலகை வைத்த போது, நேற்று முன்தினம் இரும்பு சாரம் சரிந்து மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; இருவர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில், உயிரை பலி வாங்கும் விளம்பர பலகைகள் குறித்தும், சுப்ரீம் கோர்ட் தடையை தாண்ட சட்டத்தை வளைத்துள்ளது திமுக அரசு என்பது குறித்தும் விவாதம் நடந்தது. மக்கள் மீது கட்சிகளுக்கு அக்கறை இல்லை என்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு வீடியோ தொகுப்பு.
காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.