வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ஒடிசாவில் ரயில்மோதி விபத்துக்குள்ளானதில் ரயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 8 பேரை காணவில்லை என அவரது உறவினர்கள் தேடி வருகின்றனர்.
ஒடிசா மாநிலம் பாலசோரில் 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்நிலையில், விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த 7 பேரை
இன்னும் காணவில்லை. 8 பேரின் குடும்பத்தாரும் போட்டோக்களுடன் அவர்களை தேடி வருகின்றனர். மேலும், காணாமல் போன 8 பேரின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் பெயர்கள்:
1. கார்த்திக், ஆண், வயது-19
2. ஜெகதீசன், ஆண், வயது-47
3. ரகுநாத், ஆண், வயது-21,
4. மீனா, பெண், வயது-66,
5. கமல், ஆண், வயது-26,
6. கல்பனா, பெண்-வயது-19,
7. அருண், ஆண்,வயது-21
8. நாரகணிகோபி , ஆண், வயது- 34.
ஆகியோர் குறித்த தகவல் யாருக்காவது தெரிந்தால் உடனே 044-28593990, 9445869843 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக அரசு விளக்கம்:
8 பேரும் பாதுகாப்பாக இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. தட்கல் மூலம் முன்பதிவு செய்த 8 பேரும் ரயிலில் ஏறுவதற்கு முன்பே ரயில் விபத்தில் சிக்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.