கவுகாத்தி: 150 பயணிகளுடன் அசாம் மாநிலம் திப்ருகர் சென்ற விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதாக பைலட் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, திப்ருகார் நோக்கிச் சென்ற இண்டிகோ விமானம் கவுகாத்தி விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது.
விமானம் அவசர தரையிறக்கப்பட்டதால், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் மற்றும் பாஜ., எம்எல்ஏ., க்களான பிரசாந்த் புகான் மற்றும் தெராஷ் கோவாலா உட்பட 150 க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்.