வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: இந்தியாவில் நடந்த ரயில் விபத்தைக் கண்டு மனம் உடைந்தது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் நடந்த மோசமான ரயில் விபத்தைக் கண்டு என் மனம் உடைந்தது. இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கும் என் பிரார்த்தனைகள் உடன் இருக்கும்.
குடும்பம்- கலாசார ரீதியாக இந்தியா - அமெரிக்கா ஆழமான உறவைக் கொண்டு உள்ளன. இவைதான் நம் இரு நாடுகளையும் ஒன்றிணைக்கின்றன. அமெரிக்கா முழுவதும் உள்ள மக்கள், இந்திய மக்களுடன் சேர்ந்து துக்கம் அனுசரிக்கிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.