சென்னை: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக ஆய்வு செய்த பிறகு சென்னை திரும்பிய அமைச்சர் உதயநிதி கூறியதாவது: ரயில் விபத்தில் தமிழர்கள் பாதிக்கப்படவில்லை. 21 பேர் பாதுகாப்பாக உள்ளனர். 5 பேரின் நிலை குறித்து அறிய முயற்சி நடக்கிறது.
ஒடிசா அமைச்சரிடம் பேசி தமிழர்களின் நிலை அறிந்தோம். தமிழக அதிகாரிகள் அங்கு தான் உள்ளனர். இந்த விபத்து தவிர்த்திருக்கப்பட வேண்டும். மத்திய அரசு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.