புதுடில்லி: ஒடிசாவில் நடந்த வேதனையான சம்பவத்திற்கு பிறகும், பொறுப்பு ஏற்க முடியமல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஓடிவிட முடியாது என காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: 275 பேர் உயிரிழந்தும் யாரும் பொறுப்பேற்கவில்லை. இவ்வளவு வேதனையான சம்பவத்திற்கு பிறகும், பொறுப்பு ஏற்க முடியாமல் மோடி அரசு ஓடிவிட முடியாது. ரயில்வே அமைச்சரை உடனடியாக பதவி விலகும்படி பிரதமர் கூற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.