பாலாசோர் : ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
![]()
|
ஒடிசா மாநிலம், பாலசோர் இடத்தில் கோரமண்டல், ஹவுரா எக்ஸ்பிரஸ்,சரக்கு ரயில்
என அடுத்தடுத்து மோதிய விபத்தில், 275 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து, ரயில்வே உயர்மட்ட குழு விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில், மத்திய ரயில்வே அமைச்சர், அஸ்வினி வைஷ்ணவ், இரண்டாவது நாளாக ஆய்வு செய்தார்.
![]()
|
அவர், செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது:
மீட்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இச்சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரிக்கவும், ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement