வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் ஷாலிமர்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரு ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் மூன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 275 பேர் உயிரிழந்தனர். 900க்கும் அதிகமானோர் காயமுற்றனர். இந்த ரயில் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் கூட்டம் அதிகளவு இருப்பதாக பயணிகள் சிலர் தங்களுடைய டுவிட்டர் பக்கங்களில் ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் ரயில்வே நிர்வாகத்தின் டுவிட்டர் பக்கங்களை டேக் செய்து புகார் தெரிவித்திருந்தனர்.
அப்போதே ரயில்வே அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை குறைத்திருக்கலாம் என பயணிகள் குமுறுகின்றனர்.