வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : ஒடிசா ரயில் விபத்தில், தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என, தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக, ஆய்வு செய்த பிறகு சென்னை திரும்பிய அமைச்சர் உதயநிதி, ரயில் விபத்தில், தமிழர்கள் பாதிக்கப்படவில்லை.21 பேர் பாதுகாப்பாக உள்ளதாகவும், 5 பேரின் நிலை குறித்து, அறிய முயற்சி நடப்பதாக தெரிவித்திருந்தார்.
இச்சூழலில், தொடர்பு கொள்ள இயலாமல் இருந்த, ஐந்து பேர் நலமுடன் இருப்பதாகவும், ரயில் விபத்தில், தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை எனவும், தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.